வெள்ளி, 23 ஜனவரி, 2009

இளைஞர்களை வழி நடத்துதல்

இளைஞர் சக்தி

ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, வயது வாரி விகிதம் இப்படி இருக்கும் என்று தெரிகிறது. (லட்சங்களில்)
வருடம் < 15 வயதினர் 15-64 வயதினர் < 65 வயதினர் மொத்தம்
2000 361 604 45 1010
2005 368 673 51 1093
2010 370 747 58 1175
2015 372 819 65 1256
2020 373 882 76 1331

இந்த மாபெரும் சக்தியை நாம் எப்படி ஊக்குவித்து சரியான வழி நடத்த போகிறோம்?
யாருக்கு இந்தப் பணியில் முக்கிய பங்கு இருக்கிறது?
பெற்றோர்
ஆசிரியர்
ஊடகங்கள் - சினிமா? பத்திரிக்கை? வலை? மற்றும் பல
...
பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் நாம் என்ன வழிகளை ஏற்படுத்தி கொடுக்கலாம்? என்ன கருவிகள் அவர்களுக்கு இந்தப் பணியில் உதவும்?

என் எண்ணங்கள்:
இளைஞர்களுக்கு (8 முதல் 24 வயது வரை) நேரம் அமையும் போதெல்லாம் கடமைஉணர்வும் பொறுப்புணர்வும் கற்று கொடுக்க வேண்டும். அவர்கள் செய்யும் எந்த வேலையிலும் எப்படி இந்த பண்புகள் அவர்களுக்கு உதவும் என்பதை நாம் எடுத்து காட்டலாம். இந்த வயதில் இத்தகைய அறிவுரை நிச்சயமாக அவர்களுக்கு சலிப்பைத் தரும். இந்த சமயத்தில் தான் நமது பொறுமை மிக மிக அவசியம்.

Youth Mentoring - இளைஞர் வழி நடத்துதல், என்பது பல நாடுகளில் சிறப்பாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. இதற்க்கான வழி முறைகள், இளைஞர்களுக்கு பிடித்தமான முறையில் அவர்கள் வழியிலயே சென்று எப்படி நற்பண்புகளை வளர்ப்பது, சில உத்திகள், கருவிகள், உள்ளன. ஒன்று அல்லது இரண்டு இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுடன் வாரத்தில் சில மணி நேரம் செலவிட முடியுமா? முயற்சிப்போம்.

எடுத்துக்காட்டுக்கள் மூலமும் அத்தகைய பண்புகளினால் கிடைத்த பயன்களும் அவர்களுக்கு நல்ல உன்று கோலாக அமையும்.
உங்களிடம் அது போன்ற கதைகளும், உதாரணங்குளும் உள்ளதா?
இந்த பண்புகளை சொல்லி தரும் முறைகள் உங்களிடம் உள்ளதா?
இந்த முகவரிக்கு அனுப்புங்கள்: dreamsof2020@gmail.com.
அன்புடன்.

இந்தியா 2020 எண்ணங்கள் மற்றும் செயல் திட்டம்

நம்மில் பலர் திரு அப்துல் கலாம் அவர்களின் இந்தியா 2020 என்ற முன்னோக்கு எழுத்துக்களை படித்திருக்கிறோம்.
அவரின் கூற்றின்படி "2020 ஆம் வருடத்தில் வளர்ந்த இந்தியா, என்பது ஒரு முன்னோக்கு பார்வையாய் இருப்பதை விட, அதை நாம் அனைவரும் குறிக்கோளாக கொண்டு, அதன் வெற்றிக்கு ஒவ்வொரு நாளும் செயல் பட வேண்டும்."
அப்படிப்பட்ட குறிக்கோளுக்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய போகிறோம் என்பதை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு உதவும்.
என்னுடைய முதல் பதிவு இளைஞர் சக்தியை எப்படி ஒருமுகப்படுத்தி இந்த குறிக்கோளுக்கு அவர்களை தயார் செய்வது என்பது தான்.

இதை படிக்கும் அனைவரும் இந்த பக்கங்களில் பதிவிடலாம். உங்கள் எண்ணங்களை எனக்கு dreamsof2020@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் எண்ணங்களை அப்படியே இந்த பக்கங்களில் பதிவு செய்து ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை ஊக்குவிப்போம். அவை அனைத்தையும் திரட்டி எப்படி செயலாக்குவது என்பது தான் நமது இலட்சியம்.