திங்கள், 2 பிப்ரவரி, 2009

தனிமனித தொலைநோக்கு கூற்று - Personal Vision Statment

நம் ஒவ்வொருவரும், நம் வாழ்வில், தினந்தோறும் சில முடிவுகள், சிந்தனைகளால் செயல்படுகிறோம், அப்படி செய்யும்போது, அவற்றை எந்த தளத்தில், அதாவது, என்ன மதிப்பீடுகள், விளைவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் எண்ணங்களை கொண்டு செய்கிறோம்? அந்த தளத்தை, நாம் எப்போதும் ஒரே மாதிரி கொண்டுள்ளோமா, என்று யோசித்தால், பெரும்பாலான சமயங்களில் என்று பதில் சொல்வோம்.

இந்த தளத்தை, சிறிது யோசித்து ஒரு "தொலைநோக்கு கூற்று" ஆக எழுதி, அதை கொண்டு நம் சிந்தனைகள், நடத்தைகள் மற்றும் முடிவுகளை எடுக்க முயற்சிப்போம்.

உதாரணமாக, "நான் செய்யும் காரியங்களில் நேர்மையாகவும், நல்ல எண்ணத்தோடும் செயல்படுவேன். என் குடும்பத்தை அன்புடனும், அக்கறையுடனும் பேணி பாதுகாத்து அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவேன். என் வாழ்க்கை அனைவரிடத்தும் அன்பு செலுத்தி, நேர்மையை கடைப்பிடிக்கும் விதமாய் அமையும். என் வாழ்க்கையில் நான் என்னால் முடிந்த வரை அனைவருக்கும் உதவி அவர்கள் வாழ்க்கை நல்விதமாய் அமைந்திட விழைந்திடுவேன்."இதனுடன், நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு தகுந்த மாதிரி இதனுடன் இணைத்தோ மாற்றியோ, எழுதி வைத்து கொண்டு, எந்த ஒரு காரியம் செய்யுமுன் அல்லது முடிவு எடுக்குமுன், ஒரு முறை படித்து அதை செய்தால், நம் வாழ்க்கை மற்றும் நாம் செய்யும் பணியால் பாதிக்கப்படும்/உதவிபெறும் மற்றவர் நன்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமில்லை. என்ன இத்தகைய "தொலை நோக்கு கூற்று" எழுத நீங்கள் தயாரா?

அடுத்த பதிவில்...நாம் இருக்கும் சூழலில் எப்படி நாம் எப்படி மற்றவர்க்கு உதவியாய் இருப்பது என்பதை பார்ப்போம். அத்தகைய நடவடிக்கைகளை செய்வதோடு மற்றுமல்லாமல், அதை எப்படி மற்றவர்க்கு தெரியப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் சூழலில் அதில் எப்படி அவர்களை ஈடுபடுத்துவது என்பதை பார்ப்போம், அதுவரை, இந்தியா முன்னேற, இந்திய மக்கள் அனைவரும் அனைத்து வசதிகளையும் பெற, என்ன வழி என்பது பற்றி கனவு காணுங்கள். அத்தகைய கனவுகளை எங்கோ ஒரு இடத்தில் பதிவு செய்யுங்கள். அத்தகைய பதிவுகளை நீங்கள் திரும்ப திரும்ப படித்தும், மற்றவர்கள் படிக்க வழியும் ஏற்படுத்தினால் அந்த கனவு நனவாக கண்டிப்பாக ஒரு வழி பிறக்கும்.

கனவு காணுங்கள், வளமான இந்தியாவுக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக